ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கம்சாட்கா தீபகற்பம். இப்பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த சேதங்கள் இதுவரை வெளியாகவில்லை.