கமல்ஹாசன் நேற்று தனது 65வது பிறந்தநாளை அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடும்பத்தார் மற்றும் நலம் விரும்பிகளுடன் பிரமாண்டமாக கொண்டாடினார். பிருகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேசுகையில்,’ நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், நிதி பிரச்னையும் அதிகரித்துள்ளது. அதனை தீர்க்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்க வேண்டும். இதில் அரசையோ, தனி நபரையோ குறை கூற முடியாது.’ என தெரிவித்தார்.