2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக அமைய உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைவது குறித்து கமல்நாத்துடமிருந்தோ அல்லது நகுல்நாத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் முதல்வர் […]
5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று டெல்லியில் 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும், அதற்கு முன்பதாக காங்கிரஸ் […]
மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது […]
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து கமல்நாத் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், கடந்ததிங்கள்கிழமை மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர், அதே நேரத்தில் தேசிய மகளிர் ஆணையம் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கோரியது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் குறித்து […]
மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். மேலும் சிந்தியா ஆதரவு மந்திரிகள் 6 பேர் உட்பட 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் உச்ச […]
மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒத்திவக்கப்பட்ட மத்திய பிரதேச சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் இன்று மீண்டும் கூட்ட […]
மத்திய பிரதேசம் சட்டப் பேரவையில் நாளை முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து கமல்நாத் […]
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக […]