ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். கமல் அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் தான் ஆகிறது என்றும் நடிகர் கமல் அடக்கி வாசிக்க வேண்டும் கூறினார். நடிகர் கமல் எங்களுக்கு அறிவுரைகள் சொல்ல வேண்டாம் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் மகளிருடன் கமலஹாசன் கலந்துரையாட உள்ளார். கூட்டம் நடைபெற உள்ள, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், சுமார் இரண்டாயிரத்து 500 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கு தயாராகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற கமலிடம், ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் மக்களாட்சி அமைக்க உள்ளதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார். பெரியார் சிலை குறித்த ஹெச்.ராஜா பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் வீணாக தங்கள் பேச்சாற்றலை விழலுக்கு இரைக்க வேண்டாம் என கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்துக் கூறிய வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்தாறு நாட்களாகும் கமல்ஹாசன் தங்களுக்கு […]
தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.அவரது கருத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் வார இதழ் ஒன்றிலும் எழுதி வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் அறிக்கை வெளியிட்டார். அதில், தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகத் திகழும் ராமநாதபுரம் […]