உலகநாயகன் கமல்ஹாசன் பாடலுக்கு அச்சுஅசலாக நடனமாடிய ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன், இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு . அதிலும் இவரது நடனத்திற்கு மட்டுமே ரசிகர்களாக உள்ளவர்களும் உண்டு. இவர் நடிப்பில் வல்லவன் மட்டுமில்லாமல் நடனத்திலும் சகலகலா வல்லவன் . நாட்டுப்புற நடனம் தொடங்கி, பரதம், கதக் உள்ளிட்ட அனைத்து கலைகளையும் பிச்சு மேய்ந்தவர் உலகநாயகன். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். […]