திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஜோடிப் பொருத்தம், கல்வி, உத்தியோகம், சொத்து விவரம், குடும்பப் பின்னணி போன்ற பல விஷயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. ஆனால் திருமணத்திற்கு பிந்தைய தாம்பத்ய உறவு பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அதைப்பற்றி மணமக்களுக்கு விழிப்புணர்வும் கொடுப்பதில்லை. அதன் விளைவால் திருமணத்திற்கு பின்பு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. தம்பதிகள் பிரிகிறார்கள். இத்தகைய விவாகரத்துக்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடக்கின்றன. அதனால், ‘பிள்ளைகளின் திருமணத்திற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்கும் பெற்றோர், […]