ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. தற்போது, கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. அவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் […]