கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு அவரது பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி தகவல். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார் என்றும் சிபிசிஐடி குற்றசாட்டியுள்ளது. இதையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, மாணவி […]
போலீஸ் பாதுகாப்புடன் கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் […]
பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் […]
தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி. கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இன்று பெற்றுக் கொள்ளவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். மாணவியின் உடலை இன்று காலை 6-7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்றுக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இரண்டு முறை மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் […]