கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை பெற்றோர்கள் தர மறுத்தால், பெற்றோர்களை விசாரிக்க நேரிடும். – சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தங்கள் மகள் உயிரிழந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும். என அதில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், […]
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் காவல்துறையினர் விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் […]
உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் செல்போனை சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, 2 அறிக்கைகள் நீதீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சிபிசிஐடி போலீசார் தரப்பு மற்றும் சிறப்பு […]
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அதனை அடுத்து ஜூலை 17ஆம் தேதியில் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சுமார் 410 பேர் கைது […]