கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு. கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற […]
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்தது. இதற்கான அரசாணையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இதை எதிர்த்து ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த […]
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதனிடையே , பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கடத்தி சென்றதாக புகார் […]