கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி எனும் ஊரில் நேற்று வழக்கம் போல கிருஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது காலை 9.40 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண்மணி உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்தோர்கள், எர்ணாகுளம் மற்றும் களமசேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]