திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவரது உடலுக்கு இரங்கல் தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தமிழரசன் ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சூரியன் இல்லாத கடற்கரை முழுமை பெறாது என்று இயக்குனர் அகமது கூறியுள்ளர். இதனை அடுத்து நடிகர் விஷாலும் கலைஞர் அவர்களுக்கு மெரினா கடற்கரையில் அவரது உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் டெல்லி உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்
சி பி எம் அகில இந்திய பொது செயலாளர் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவிடும் படி வலியுறுத்தி உள்ளார்.
காவேரி மருத்துவமனையில் இருந்து பல ஆயிரம் தொண்டர்களின் கண்ணீருடன் கலைஞரின் உடல் அவரது இல்லம் அமைந்திருக்கும் கோபாலபுரம் சென்றடைந்தது.
கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இலங்கை அதிபர் சிறிசேனா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..