கலைஞர் நூலகத்தின் கட்டுமானப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல். மதுரையில் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகம் ஏழு மாடிகள் கொண்ட நூலகமாக, 2 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் இடம் பெறும் வண்ணம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும், பிப்ரவரி மாதம் உலகத்தை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல். மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று […]