“கலைஞர் முக கருணாநிதி வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றிய புத்தகத்தை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வன் எழுதிய “கலைஞர் முக கருணாநிதி வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் முதலமைச்சர். திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய “திராவிடமும் சமூக மாற்றமும்” என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.
வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று […]
கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற […]