சென்னை : தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்து, ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, 2024-25-ம் நிதி […]