கலைஞரையும் பாமக நிறுவனர் ராமதாஸையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் என அன்புமணி ராமதாஸ் பேட்டி. முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். […]
சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்று கூறப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில்,கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் […]