சென்னை : மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடுவது வழக்கம். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட […]