Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. […]