கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய திட்டங்கள் பற்றிய முழுவிபரத்தை காண்போம். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 6 முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1.சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: ஏழை,எளியோர் ஏற்றம் பெற,தம் வாழ்நாளில் கலைஞர் அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி,தான் வாழ்ந்த […]