சென்னை: இன்று கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை அடுத்த மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மொத்தம் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது. திமுக நிர்வாகி சுந்தர் குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார்.