மத்திய வேளாண்துறை சார்பில் கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்து கஜா புயல் நிவாரணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வேளாண் துறை சார்பில் கஜா புயல் நிவாரணமாக 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார். இதில் 93 கோடி ரூபாய் தென்னை மரங்கள் பாதிப்பிற்காகவும், தோட்டக் கலைத்துறைக்கு நிவாரணமாக 80 […]
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கஜா புயலால் பாதிக்கபட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், தனியார் அமைப்புகள் சார்பில், பட்டுக்கோட்டையை அடுத்த பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பத்தாயிரம் தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன.
கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் தங்கள் இயல்பு வாழ்கை திரும்ப கிடைக்கவில்லை. இன்னும் பலர் உதவிக்காக காத்திருக்கின்றனர். பலர் அவர்களுக்காக உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் தான் சன் டிவியில் தொகுத்து வழங்கும் ஓர் நிகழ்ச்சியில் கஷ்டப்படும் ஒருவருக்கு பிரபல திரைப்பிரபலங்கள் உதவுவார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை கஜா புயலால் […]
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலில் சிக்கி டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் பால், வேட்டி, சேலை, போர்வை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். புயல் மற்றும் மழை தாக்கியதில் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பகுதி […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணிக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மூன்று கோடி ரூபாயை கொடுத்த நகராட்சி நிர்வாகம், வருவாய்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிகளில் தன்னார்வலர்களிடம் சேகரித்தனர். இதில், அரிசி, பருப்பு, எண்ணெய், மருந்து பொருட்கள், ஆடைகள், பாய்விரிப்புகள் என 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. dinasuvadu.com
தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் அண்மைகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவந்தார். இவர் தற்போது வந்த கஜா புயல பற்றி தனது டிவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இயற்கை விவசாயி நம்மாள்வார் கூறிய செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழகத்திற்கு புயல் வந்தால தான் மழை. இனி தமிழகத்திற்கு பருவமழை கிடையாது என்றும். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள […]
அரசியல் ஆதாயத்திற்காகவே, டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சித்து வருவதாக,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மத்தியிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், புயலால் பாதிக்கப்பட்ட திருவாருர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். […]
கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனந்தம் பவுண்டேசன் எனும் தனியார் தொண்டு நிறுவனம், சென்னை கே.கே.நகரில் இயங்கி வருகிறது. கல்வியில் பின்தங்கிய ஏழை-எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில, இந்த தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், கஜா புயல் மற்றும் மழையால், பாடப் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்க, இந்த தொண்டு நிறுவனம் முன் […]
கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு தண்ணீருக்காக ரெம்பவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த பொருளுதவி,நிதியுதவி என உதவி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்தவர்களும் பலரும் உதவி வருகின்றனர். சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம், விஜய் சேதுபதி 25 லட்சம், சிவகார்த்திகேயன் 20 லட்சம், ஜிவி.பிரகாஷ் குமார் 2 லாரி நிவாரண பொருட்கள், விஜய் 40 லட்சம் என நிதியுதவி பலரும் அளித்து வருகின்றனர். இதேபோல தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான […]
கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், இருப்பிடம் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம் நிதியுதவி அளித்தனர். விஜய் சேதுபதி 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சிவகார்த்ததிகேயன் 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நிவாரண பெருட்களை […]
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்/ ரஜினி ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள […]
கஜா புயலினால் முன்பு இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை அடைந்துள்ளன. அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளே சில இடங்களில் இன்னும் கிடைக்காமல் உள்ளன. அதனை கண்டு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் 29ஆம் தேதியன்று சூப்பர் ஸ்டாரின் 2.O ரிலீசாக உள்ளது. இதற்காக கட்டவுட், பேனர் என கொண்டாட ரசிஜிநி ரசிகர்கள் பணம் […]
கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் கூட முழுதாக சேரவில்லை. அவர்களுக்கு தற்போதுதான் பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்ப்பியுள்ளார். source […]