சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.