சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். விழாவிற்குள் வருகை தரும்போது மிஷ்கினை பார்த்து நித்யாமேனன் இன்ப அதிர்ச்சியடைந்து அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவிற்குள் வருகை தந்தவுடன் நித்யா மேனன் மிஷ்கினை பார்த்து ஆச்சரியத்தில் […]
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2025 ஜனவரி மாத இறுதியில் வெளியீடு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அதே தேதியில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு […]
காதலிக்க நேரமில்லை : இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். தி.ஜா. பானு, யோகி பாபு, லால், வினய் ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். காதல் கதையை மையமாக வைத்து […]
ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடந்து இந்த ஆண்டு, அவரது நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் […]