Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 […]
படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, மீன்வளம், பால்வளம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 4 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், கட்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை […]