காபூல் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்பட்டதையடுத்து 70 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காபூல் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படித்த துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தலிபான்கள் பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்தனர். இதனையடுத்து,காபூலை தளமாகக் கொண்ட மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,கடந்த ஆண்டு அஷ்ரப் கெய்ரத்தின் ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர்,அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார். இதற்கு […]