கபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர் சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற […]