பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகுதியுள்ள பல்கலைக்கழக வாசலில் வைத்து பிரபல கபடி வீரர் தர்மிந்தர் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தவுன் கலன் எனும் கிராமத்தில் கபடி சங்க தலைவராக செயல்பட்டு வந்ததுடன், அரசியலிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்ட தனது சக கபடி வீரருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம்,ஜலந்தரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பக்கியால் சுடத் தொடங்கினர்,இதல் சுமார் 20 குண்டுகள் சந்தீப்பின் தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவரை சிலர் துப்பாக்கியால் சுடுவது வீடியோவில் […]