அவசர காலங்களில் காவல்துறை சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். தமிழகத்தில் பொது மக்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவி மற்றும் சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் செயலியில் தகவல் அளித்தால் துரித சேவை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பெண்கள் உள்ளிட்டோர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி […]