அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியம் இல்லை என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பொதுதேர்வுகள் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியமே இல்லை […]
அமைச்சர் செங்கோட்டையன் கோபி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களித்தார். பிறகு பேசிய அவர், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்தலில் ஜனவரி 3ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் தற்போது முதல் கட்டமாக தீவிர வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மொத்தம் 27 மாவட்டங்களில் 156 ஒன்றியத்தின் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் உயர் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் வாக்களித்து […]
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை காட்டும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் ஆசிரியர் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மொழி மட்டும் இருக்கும் வகையில் இருந்தது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி […]
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை […]
கணினி மயமாக்கப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அடுத்த அதிரடி அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறையில் புதுபுது மாற்றங்களை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,மாணவர்களின் நலன் கருதியும் , வருங்காலங்களில் மாணவர்கள் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் 12ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் என்றார்.அதில் மாணவர்களுக்கு படங்கள் காணொளி கட்சியாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக 3000 பள்ளிகளில் கணினிமயமாக மாற்றப்படும் என்றும் […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளின் நிறம் மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும்1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் […]
பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ரூ.2.17 கோடி செலவில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களில் ரூ.2 கோடி நிதி உதவியில் கணினிமயமாக்கப்படும். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.