எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் […]
திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ..! பரவிய தகவலைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழகிரி என்ற பெயர் ஆகது என்று அமைச்சர் கிண்டல் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டிட்ட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இந்நிலையில் அன்மைக்காலமாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி திமுக மீது தனது அதிருப்திகளை தெரிவித்து வந்தது இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் […]
அஜித் அரசியலுக்கு வரலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.விழா மேடைகளில் அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை […]
அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் . மேலும் அதிமுகவினரின் வீட்டின் கதவை திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்று பேசினார்.ஜெயிப்பதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கோ அத்தனையும் செய்வேன் என்று தெரிவித்தார்.
ரஜினி குறித்து அழகிரி கூறியதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,மு.க.அழகிரி ரஜினியின் கருத்து குறித்து கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,அழகிரி, ரஜினி கருத்துகளை பொருட்படுத்த […]
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS — KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019 தமிழக பாஜக இணையதள தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் வாயிலாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதாவது திருக்குறளை ஆவின் பால் […]
உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் […]
இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை என்று என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அதிமுக சார்பாக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்..அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் கேசவநேரி பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட […]
பேருந்து வசதி இல்லை என்று கூறிய பெண்ணுக்கு உடனைடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் செங்கோட்டையன்,செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் தெற்கு காடுவெட்டி பகுதியில் அமைச்சர் […]
நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும்.நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான். ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது. மக்களவை […]
ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் மரணம் என்பது வருத்தப்பட கூடிய நிகழ்வு, விதிகள் மீறி பேனர் வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் […]
மாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தநிலை வரத்தான் செய்யும்.பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அமமுகவில் இருந்து அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்.மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது […]
5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் […]
முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இம்மாதம் 28-ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முதலமைச்சருடன் சில அமைச்சர்களும், அதிகாரிகளும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். தேசிய பார்வையில் பாஜக […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 2012-13 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி நேற்று விசாரணை அறிக்கையில் அமைச்சர் […]
அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் […]