நேற்று நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது […]
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை,அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக […]
தமிழகம்:நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக […]
தமிழகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புகார் கொடுத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் காண கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டனர். பாஜக சர்வாதிகார சக்தி: இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் […]
தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்ததாக கூறி கே.எஸ். அழகிரி உள்பட 143 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை கண்டித்து நேற்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரி உள்பட சுமார் 140 பேரை காவல்துறை கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து […]
தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனாவை கண்டறிய பயன்படுத்தப்படும் ரேபிட் கிட்களை மத்திய அரசு, சீனாவிடம் இருந்து வாங்கியது. பின்னர் வாங்கிய கருவிகளை மத்திய அரசு மாநிலம் வாரியாக பிரித்து கொடுத்தது.ஆனால் ராஜஸ்தானில் விரைவான சோதனைக் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் போது தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையெடுத்து குஜராத்திலும் ரேபிட் கிட்டில் […]
மது இல்லாத தமிழகத்திற்கு ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் ,கடந்த 28 நாட்களாக நடைமுறையில் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது முக்கிந்த மகிழ்ச்சியை தருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் 90% கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்த்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல […]
நேற்று திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இளைஞர் கங்கிராஸ் தரப்பில் இரு கோஷ்டிகள் இடையே பிரச்சனை எழுந்தது. இன்று, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் ஒருவரின் பெயரை வாசிக்கவில்லை என கூறி இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நேற்று திருச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விழுதுகளை நோக்க்கி என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அகில இந்திய தலைமை செயலாளர் ஜெமி மேக்தா மற்றும் மாநில இளைஞரணி தலைவர் அசன் மௌலானா ஆகியோர் […]
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். அந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் பெயர் வாசிப்பின் போது ஒரு பிரமுகரின் பெயரை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது அந்த பிரமுகரின் ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் […]
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம். எனவும், கடந்த நான்கு தேர்தலுக்கு முன்னால் நடைபெற்ற எந்த கருத்து கணிப்பும் பலிக்கவில்லை என […]
இடைத்தேர்தல் அறிவித்துள்ள அறவகுறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் நேற்று தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் களமல்ஹாசன் பேசுகையில், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அவர் பெயர் நாதுராம் கோட்ஸே’ என கூறினார். இதற்கு பாஜக தலைவர்களான எச்.ராகா மற்றும் தமிழிசை போன்ற தலைவர்கள் கடும் கண்டனத்தை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிடுகையில் , ‘ கமல்ஹாசன் கூறிய இந்த கூற்றை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.’ […]