தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.