தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை,முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடக தினத்தில் அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சினர் தனிக்கொடியை ஏற்றி கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.இதுபோன்று தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் […]
சென்னை அடையாறில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் இரட்டை நிலைப்பாட்டுடன் பேசி வருகிறார்கள். மத்திய பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்திற்கு உட்பட்டே எடுத்து வருகிறது. உலகத்தரத்தில் இந்திய வங்கிகள் வருவதற்கு பொதுத்துறை வங்கிகளை இணைப்பது வரவேற்கத்தக்கது. வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், எனினும் அவர்களுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் பல தாக்கங்கள் ஏற்படும். […]
கும்பகோணத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் ஆர்வலர்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும். மேலும் கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்க நடவடிக்கை, இதற்காக ரூ3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.