சென்னை : கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள். மக்களை […]
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அவரது வருகைக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மேலும் மலர் தூவியும் கொண்டாடி செந்தில் பாலாஜியை வரவேர்த்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, முதல் விஷயமாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினர். முன்னதாக, தனியார் பத்திரிகைக்கு பேட்டி […]
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் பிரபல ரவுடிகளை கண்காணித்து, அதில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அடுத்ததாக, […]
சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இதுவரை 599 கோடி மதிப்பீட்டிலான 37 பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிலை அறிக்கையை சட்ட பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 3 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை […]
எமர்ஜன்ஸியையே கண்ட இயக்கம் திமுக; சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் கணேசன் உள்ளிட்ட பல […]
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என் நேரு தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி கூட்டாக பேட்டியளித்தனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற […]
தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுகவின் கே.என்.நேரு பேசுகையில், காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசினார்.இவரது பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறிவா என்றும் கேள்வி எழுந்தது. இதன் பின்னர் இது தொடர்பாக கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.அப்போது கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் […]