ஈரோடு மாவட்டத்தில் இன்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கவுண்டன்புதூரில் ரூ.8.66 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடத்தையும் , கரட்டுப்பாளையம், வைரமங்கலத்தில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையும் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர், அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.