சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி […]
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் […]
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் நேற்று பிற்பகல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்-ஐ சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மாநில அரசு அனுப்பும் விண்ணப்பத்தில் உள்ள மொழிகளிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த […]