கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி (ஜேவிபி கட்சி) அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றுக் கொண்டார். அதே நேரம் புதிய அமைச்சரவையும் அதிபர் அநுர குமர முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டது. இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் இடதுசாரி கட்சியான ஜேவிபி கூட்டணியுடன் களமிறங்கியது. நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத […]