கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலைசெய்த கிருபானந்தன் என்பவன் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவனை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், […]