சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் தாஹிம் ரமணியை திடீரென மேகாலயா உய்ரநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதியரசர் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கொலிஜியம் எனும் அமைப்பானது நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் முறையாகும். இந்த அமைப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.