வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதியில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர்களாகிய கெய்சர் ஜஹான் மற்றும் ஹபீஸ் கான் ஆகியோரின் 19 வயது மகள் மும்தாஜ் கான் விளையாடியுள்ளார். இது தொடர்பாக மும்தாஜ் கானின் பெற்றோர்கள் கூறுகையில், நாங்களும் வாழ்க்கையிலும் சம்பாதிக்க வேண்டும். ஆனால் அவள் விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்பினோம். அதனால் தான் அவளை அந்த விளையாட்டில் பங்கேற்க ஒப்புக் கொண்டோம் என கூறியுள்ளனர்.