#Judgment:சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்,ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை:அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ்,ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு! கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்கி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என உத்தரவிடக் கோரி சசிகலா,டிடிவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு … Read more

12 ஆண்டுகளுக்கு பின்…முக்கிய பிரமுகர் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர். இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை … Read more

யுவராஜுக்கு என்ன தண்டனை? – நீதிமன்றம் இன்று அறிவிப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் … Read more

50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு!

OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில்  மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை  அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக … Read more

உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு  இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. … Read more

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த … Read more

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு..

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வழக்கில், வரும் 22 ஆம் தேதிக்கு பிறகே சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை மாதம் துவங்கி, 12 நாட்கள் வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது. இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் … Read more

“சிக்குகிறார் ஹெச்.ராஜா” வழக்கு பாய்கிறது..!!

ஹெச்.ராஜா மீது திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புகார் தெரிவிக்க இருக்கிறார்கள். ஹெச்.ராஜா, பாரதீய  ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ஹெச்.ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியானது. ஆனால் இன்று (செப்டம்பர் 16) அது குறித்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா, ‘எனது பேச்சை … Read more

நெல்லையில் 15,000 வழக்கு பதிவு..!!

திருநெல்வேலி:  சாலை போக்குவரத்தக்த்தை மேம்படுத்துவதற்கு ,சாலை விபத்தை போக்குவதற்கும் சில நடவடிக்கைகளையும் , கட்டுப்பாடுகளையும் வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்டு வருகினறது. நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது இந்த ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறதது.அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு  இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  சில தினங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் பின் … Read more

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஆஜர் ..!

அமெரிக்கா  மற்றும் இங்கிலாந்தில் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து வருமான வரி கணக்குகளை  காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது . இந்நிலையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தனர் . மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இன்று  ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் … Read more