ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ராமுலு என்பவரை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். முன்னாள் நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., […]