கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார். ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் பெயரை அறிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.மனித உரிமை அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களை மட்டும் களத்தில் […]
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி 3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விடுதலையாக உள்ளார்.நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்,நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆகியவைகளை பற்றி விமர்சித்த நீதிபதி கர்ணன் ஜீன் 20ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார்.இப்போது 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார். இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.