வியாழன் கோளின் உள்நிலவான ஜோவியன் நிலவு ஐஓ(IO) வை நாசா படம்பிடித்து அதன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜூனோ பணித்திட்டமானது, வியாழன் கோளின் உட்புறத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் எரிமலை உலகமாகக் கருதப்படும் வியாழன் கோளின் உள்நிலவான ஜோவியன் நிலவை படம் பிடித்துள்ளது. தற்போது விண்கலமானது, வியாழனின் உள் நிலவுகளை ஆய்வு செய்வதற்கான பணியின் இரண்டாவது ஆண்டில் இருக்கிறது. மேலும் இந்த விண்கலம், 2021இல் வியாழனின் மிகப்பெரிய […]