சென்னையை சேர்ந்த இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் பத்திரிக்கையாளரான பிரதீப் தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், சென்னையை சேர்ந்தவர். இவருடைய வயது 29. இந்நிலையில், இளம் செய்தியாளரான பிரதீப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.