தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் […]