சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மிகவும் காட்டத்துடன் திமுக குறித்தும் பாஜக குறித்தும் நேரடியாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்து பேசியிருந்தார். […]