கொரோனா தொற்று காரணமாக உத்திரபிரதேசத்தில் உள்ள இரட்டையர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாட்டில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள், பிரபலங்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனா மிக தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரெட் ஆகிய […]