அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் டோக்கியோவில் குவைத் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் இந்த மாநாட்டின் போது சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜோ பைடன் மே 20 முதல் […]
அமெரிக்காவில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திய ஐடா புயல் பாதிப்புகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாண பகுதியை அதிகளவில் தாக்கிய ஐடா புயல் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஐடா புயல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே இருளில் மூழ்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று புயல் பாதித்த பகுதிகளை அமெரிக்க அதிபர் […]
டெல்டா வகை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முதலாக பி1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பு […]
கொரோனாவின் பிறப்பிடம் குறித்து 90 நாட்களில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் அமெரிக்க நுண்ணறிவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை நுண்ணறிவு அமைப்புகள் தீவிரமாக கண்டறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களை துருக்கி அதிபர் எர்டோகன் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெறக்கூடிய மோதல் தற்பொழுது ஒரு வாரமாக மிக அதிகமாக ஏற்பட்டு வருகிறது. காசா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது கடந்த வாரம் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பினருக்கும் […]
இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையேயான பல ஆண்டு மோதல் தற்போது மீண்டும் தொடர்ந்து ஒரு வர காலமாக வெடித்து வரும் நிலையில், காசா முனை மற்றும் மேற்குக் கரையிலும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேல் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். […]
கடந்த ஆண்டு டிரம்ப் இந்தியாவிற்கும் ஐரோப்பியாவிற்கும் இடையே பயணத்தைத் தடை செய்த பொழுது, எதிர்ப்பு தெரிவித்த ஜோ பைடன் தற்போது இந்தியாவிற்கான பயணத்தை தடை செய்திருப்பது அமெரிக்க குடியரசு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தரக் கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி செய்தால் அதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் நாட்டிற்கும் இடையேயான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது தலிபான் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அண்மையில் […]