அமெரிக்கா : அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக தற்போது செயலாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் […]
Russia : ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வெளியே கிரோகஸ் நகரில் நேற்று பிரபல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் கடயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு […]
சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு அமெரிக்காவில் சாண்ட்பிராசிஸ்கோவில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நான்கு நாள் பயணமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீனா அதிபர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்கள் மத்தியில் பல்வேறு […]
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயும் தொடர் பனிப்போர் நிலவி வருகிறது. காசாவில் நுழைந்து […]
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசா நகர் ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இன்று சென்றுள்ள அமெரிக்க அதிபரின் பயணம் ஆபத்தானதா என கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ்இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, […]
அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் ‘பாம்ப்’ புயலால்(Bomb Cyclone) பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இந்த ‘பாம்ப்’ புயலுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாம்ப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் கார்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணியில் தேசிய காவலர் மற்றும் உள்ளூர் அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் […]
இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பின்போது,கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டது என பிரதமர் மோடியை ஜோ பைடன் […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பல பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன. இந்நிலையில்,கடந்த வார இறுதியில் சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும்,மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த வகையில்,சிகாகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மைனர் மற்றும் 62 வயதான பெண் உட்பட அனைத்து வயதினரும் அடங்குவர்.பிரைட்டன் பார்க், […]
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்ல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக தகவல். உக்ரைன் மீது ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்தி வந்தபோது உக்ரனுக்கு ராணுவ மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்க வழங்கியது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூடுதல் ராணுவ உதவியில், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ரசாயனம் அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் ஆகியவை அடங்கும். கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்கா […]
உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு மத்தியில் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு இடையில் அடுத்த வாரம் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதாவது, மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை தூண்டியதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான சர்வதேச பதிலைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மார்ச் 25-ஆம் தேதி போலந்துக்குச் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போலந்து நாட்டின் தலைநகர் […]
உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடிக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு. ரஷ்யா மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி நிதியுதவியாக வழங்க அமெரிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து அறிவித்திருந்தது. அதாவது, உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக சுமார் ரூ.1900 கோடி வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு, […]
அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குழு நேற்று வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது. துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தின் போது பாதுகாப்பான காணொளி வாயிலாக ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையில், மாநில […]
அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை […]
சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாக அமரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் வல்லரசு நாடான அமெரிக்காவில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக […]
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி ,அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தது ராணுவம்.மேலும் மியான்மரில் உள்ள ஆங் சான் சூச்சி ,அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் முறையாக நடைபெற்ற பின்னர் ஆட்சி திரும்பி அளிக்கப்படும் என்று ராணுவம் தரப்பில் தகவல் […]
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று டிரம்ப்பின் பதவி காலம் முடிவடைவதுடன் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனின் பதவியேற்பு […]
வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டி வந்தார். நேற்று வாசிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் அதிகாரம் மாற்றம் நடைபெற்றது. அப்போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றிகையிட்டு கடும் வன்முறையில் ஈடுபட்டனர். ட்ரம்ப் ஆதரவாளர்கள் […]